Tuesday, 3 January 2012

ரகசியமாய்...


ரகசியமாக கனவு காண,
ரகசியமாக பேச 
மெல்ல சிரித்து, அழகாக வெட்கப்பட, 
கற்றுக்கொண்டது என்னுள் உள்ள ஒருவனாள் !

உன் மூச்சின் வெப்பத்தில் கரைந்து உருகவும்,


கண் ஓளியில் உயிர்த்தெழுவதும் 
பரீசியமானதும் உன்னால்......

உன்னுள் என்னை தொலைத்து, 
என்னுள் உன்னை பதியவைத்துள்ளேன்
வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்!



என்னுள் ரீங்காரமிடும், 
உன் முனுங்களும், சினுங்களும்
என் காதுகளுக்கு மட்டும் கேட்கும் ரகசியமாய் !

உனக்கேன நான், என்னக்கேன நீ - என 
என்றும்  இருப்பாயா என்னுள் ரகசியமாய் .....