Monday, 3 October 2011

முதல் பார்வை. . .


உன் முதல் பார்வையிலேயே வீழ்ந்தேன் 
என்று சொல்லலாம் . . .
யாரிடமும் இல்லாத ஓர் வசீகரம் . . . 
முன் எப்போதுமில்லாத உணர்வு. . . 
இத்தனை மாற்றங்களும். . . 
நொடிப்பொழுதில் நீ வீசிச் சென்ற பார்வையால் . .. 
பார்த்தவுடன் பற்றிக்கொண்ட 
விழிகளைவும் . . . 
மின்னலென வெட்டிச் சென்ற - உன் 
கண்களின் அசைவைவும் 
தேடி அலைகிறேன். . . 
என்றோ ஒருநாள் என்னை 

கிரங்கவைத்த விழிகளை காண்பேன். .. 
அதுநாள் வரை -
 உன் நினைவுடன் . . . 



Sunday, 2 October 2011

ஞாபகம் இல்லையோ!

இதயக்கூட்டில்  சிறகுகளை 
விரித்துப் பறந்த நம் காதலை . . . 

கொஞ்சிப்பேசி மகிழ்ந்து 
களித்த நாட்களை . . . 

எனக்கு நீ, உனக்கு நான் ! 
என பேசியவற்றை . . . 

நீ மறந்துவிட்டதால் யாரோ என்பது போல. . . 
பார்த்தும் பார்க்காமல் செல்கிறாய் . . . 

உன் நினைவுகளை சுமந்து வாழ்வதால் 
சிலையாய் நின்று . . .  
நீ சென்ற வழியை விரைத்து
பார்க்கிறேன் . . . 
நீ கல் என்பது தெரியாமல் . . . 


 

Thursday, 29 September 2011

தேடல்


என்னுள் ஒளிந்திருக்கும் 
ஓர் உயிரின் தேடல் . . . 
நீ விட்டு சென்ற சுவசக்காற்றை தேடுகிறேன் . . . 

ஓர் முறை சுவாசிக்க. . . 


நான் உனக்கும். . . நீ எனக்குமாய் பருகிய, 
தேனீர் கோப்பையில் தேடுகிறேன் . . . 
உன் இதழ்களின் பதிப்பை . . . 
                        ஓர் முறை முத்தமிட. . .

விலகி ஓட பிடித்து இழுத்த 
உன் கரங்களின் தடத்தை தேடுகிறேன் . . . 
                  ஓர் முறை கை கோர்த்து நடந்திட . . . 

போ என்றதும் தயங்கி சென்ற 
பாதச்சுவடை தேடுகிறேன்... . 
         என் பாதத்தையும் அதில்  பதித்திட. . .
நினைவலைகளை தேடி தேடி அலைகிறேன். . . 
        ஓர் முறை உன்னோடு வாழ்ந்திட. . . 
என் தேடல் தொடருமா . . .?