Sunday, 10 February 2013

விரும்பா நிகழ்வு

                                                      விரும்பா நிகழ்வு 

விரும்பியது கிடைக்கவில்லை என்றால்,
 கிடைத்ததை விரும்ப பழகிகொள் என்று சிறுவயது முதலே,
 என் தாயால் எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
 ஏழ்மை சூழ்ந்து இருந்ததால்
 இந்த நிகழ்வு என்வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்தது...

பள்ளி, கல்லூரியிலும் விரும்பியது  கிடைக்காதால்...
கிடைத்ததை நேசித்து, அதிலும் வெற்றிபெற முட்டி மோதினேன்
அத்துடன், நிற்கவில்லை அந்த  விரும்பா நிகழ்வு..

எனக்கானவன், நிறத்தில் என்னைவிட  சற்று அதிகமாக,
உயரத்தில் எனக்கு சமமாக... என,
என்  கனவுக்கு மெத்தை இட்டு, தாலாடி துயில் கொண்டேன்..

திருமண சந்தையில் கட்டுபடியான ஏலம் -  என்
துயிலை கலைத்து, கனவை கிழித்தது...

அப்பாவுக்காகவோ, அம்மாவுக்காகவோ
மீண்டும் ஒருமுறை என் வாழ்வில்  நிகழ்ந்தேறியது
அந்த விரும்பா நிகழ்வு...

தனிமையிலும், வெறுமையிலும் ஆண்டுகளை
தொலைந்த பின், கரைந்து போன கனவை  தேடுகிறேன்.
எனக்காக ஓர் நாள் வாழ...



Saturday, 8 September 2012

வலி...


உன்னை தொலைத்தப்பின்தான் தெரிந்தது
தேடலின் வலி...

விழித்தவுடன் களைந்த கனவை தேடுகிறேன் ...
நிஜத்தை தொலைத்த -பின்

சிரிப்பில் ஏக்கங்களை புதைத்து சவமாக வாழும்
 பாவத்தைய செய்ய சொல்கிறாய்....


விழி...

Monday, 20 August 2012

நிலா ...



இரவு மொட்டை மாடியில் அமர்ந்து நிலாவை உற்று பார்த்தேன்... நிலா... எந்தனை அழகு... எவ்வளவு குளுமை ...என்ன இனிமை... என் தினேஷை போலா... சில நொடி என் நிலாவோடு ஒன்றிபோனேன்.

அன்று முதல், என் செல் போனில் உன் பெயரை நிலா என மாற்றி பதிவு செய்து கொண்டேன்...


நிலா... வானம், காற்று.. மழை...
நிலாவே வா... என நிலா பாடல்களோடு ஒன்றிவிட்டு கனவோடு லாபித்திருந்தேன்...


செல் போன் சிளிங்கி, என் கனவை கலைத்தது... செல்லம் நூறாயிசு டா உன்ன பத்திதான் நெனசிடு இருந்தேன் நீயே கால் பண்ணிட டா ...

அப்டியா செல்லம்... என்ன நெனச்சா?
ஏதோ நெனச்சேன்... அதெல்லாம் சொல்ல முடியாது...
சரி... சாப்டியா... டி
இல்ல டா... உன்கிட்ட பேசிடு சாப்டலாம்னு வெயிட் பண்ணேன்...
அப்புறம் வேற என்ன டி... நம் உரையாடல் நீண்டு கொண்டே போனது... பிடித்த நடிகர், படம், பாடல், நகைசுவை என் பலவற்றை பேசியும் முடிவில்லாமல் பேசிய வற்றையே பல முறை பேசினோம்...

டேய் போதும் டா... எவ்ள நேரம் பேசுவ, பசிகிது டா ...
செல்லம் கொஞ்ச நேரம் பேசு டி...
டேய் போடா மார்னிங் பேசு... ஓகே...
போடி... போடி... நல்ல சாப்டு என்று செல்லமாய் கோபித்து கொண்டு போனை துண்டித்தாய்...

படுக்கையில்  விழுந்து, வராத உறக்கத்தை வரவைக்க  புரண்டு புரண்டு படுத்தேன்... உறக்கத்திலும் தட்டி எழுப்பியது உன் நினைவு... எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் உன்னை வட்டமிடுகிறதே என் மனம் இதற்கு பெயர்தான் காதலா? என்னை போலவே நீயும் காதல் வயப்பட்டு இருக்கிறாய், ஆனால் மறைக்கிறாய்... எப்போது சொல்வாய் என் மீதான காதலை...
மாதங்கள் பல கடந்தன...  இன்னும் உன் மனதை திறக்க மனம் வரவில்லையா?
ப்ளீஸ், சொல்லுடா ஐ லவ் யூ- னு.


ஒரு நாள் உனக்கும் எனக்கும் சிறிய சண்டை, அன்று வழக்கத்தைவிட அதிகமாகவே திட்டி தீர்த்து விட்டாய்...
ஏன் டா இப்டி திட்றா?
எது கேட்டாலும் கோவமவே பேசுற என்ன ஆச்சிட உனக்கு?

ஆமாம்... நீ சொல்றதுக்கெல்லாம் தலையட்டிடு கூஜா தூக்கிடு உன் பின்னாடியே திரியனுமா வேற வேல இல்ல எனக்கு...

ஏன், டா இப்டி பேசுறா...
நா இபோ என்ன சொல்லிட்டேன், வர வர உனக்கு என்ன பாத்தாலே பிடிக்கிறது இல்ல... என்று கேட்டபோதே என் கண்களில் கண்ணீர் பீரிட்டு கொட்டியது... போதும், நீலிக்கண்ணீர் வடிக்காதே என்றாய்...


என் மனதின் பதைபதைப்பு, என்னை விட்டு சென்று விடுவாயோ என்ற பதற்றத்தில்ஆற்பரித்து கொட்டும்  அழுகை உனக்கு  எப்படி  நீலிக்கண்ணீராக தெரிகிறது...


அன்று முதல் நீ என்னிடம் சரியாக பேசுவதில்லை, ஏனோ ஒப்புக்கு பேசுவது போல பேசுகிறாய்...
என்ன ஆச்சி இவனுக்கு, ஏன் இப்டி மாறிடன்...
உன்னிடம் கேட்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல்
எத்தனையோ இரவுகளில் உறக்கத்தை தொலைத்து இருக்கிறேன்.


திடீரென ஒரு நாள் அப்பா ஒரு பொண்ணு பாத்து இருக்காரு கட்டுன அந்த பொண்ணதான் கட்டணுமாம்... பொண்ணு  சுமாராதான் இருக்கு ...
என்ன இருந்தாலும் உன் அளவுக்கு வருமா செல்லம் என்றாய்...

அப்போதுதான் புரிந்தது i am just time pass என்று.

ஒரு பிணத்தைய காதலித்து ஏன் தவறு...

அழுவேன் என்று நினைக்காதே...
பாறையில் நீர் கசியாது?

Friday, 17 August 2012

ஓர் வார்த்தை சொல்லடி



நீ பலமுறை கிழித்தெறிந்த காகித கிறுக்களை
தலையணையாக்கி உறங்கினேன் . . .
கனவிலும் கிழித்து வீசுகிறாய்...

பின்னிமுடித்து பூ சூடும் உன்  கூந்தலும்
சொல்லுதடி
என் மீதான காதலை ...

என்னை ஆயிரம் வசை பாடினாலும்...
இறுதியாய் பார்க்கும் ஒற்றை பார்வை  சொல்லுதடி
உன்  காதலை

நீ மறைத்து ஒளித்து ஓடினாலும்...
உன் வெட்கம்  வெளிபடுத்துகிறது
என் மீதான காதல் ...

கொல்லாமல் கொல்லும் பார்வையால்
நித்தமும் சாகிறேன்!
ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போ
நான் உன்னவள் என்று
சில நொடி உயிர் வாழ்கிறேன்

Sunday, 29 July 2012

அனு அனுவாக சாக நினைதால் காதல் செய்


    அனு அனுவாக சாக நினைதால் காதல் சரியானதுதான்! என ஆட்டோவில் எழுதியதை பார்த்து, காதல் என்ன ஆட்கொல்லி நோயா? அனு அனுவாக வாழ நினைதால் காதல் சரியானதுதான் என மாற்றி எழுதவேண்டும்.

ஈருடலின்  ஒற்றை சுவசம்தானே காதல், ஊடலும், கூடலும்தானே, காதலை ஆழப்படுத்தும் என்று எனக்குள் நானே பேசிக்கொண்டேன்....


நானும், ப்ரியாவும் பழக ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகிறது, ஆனால், இதுநாள் வரை அவள் ஒருமுறை கூட என்னிடம் முகம் சுளித்ததில்லை கோபம் வந்தால் கூட, மவுனமான புன்னகை ஒன்றுதான் அவளின் வெளிப்பாடாக இருக்கும், உண்மையில் ப்ரியா, எனக்கு கிடைத்த வரம். 

முந்தய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு, என்னவளின் நினைவோடு, கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து, அவளுக்காக காத்திருந்தேன்...

ப்ரியாவை என்ன இன்னும் காணோமே, சீக்ராம வந்துடுவளையே,  ட்ராபிக்ல மாடிகிட்டலா,போனை எடுத்து டயல் செய்தான். போன ஆப் 
பண்ணி இருக்கா என்ன ஆச்சி... மாலை மங்கி இரவை தொட்டு விடலாமா? என எண்ணிக்கொண்டு இருந்தது.

அதுவரை அமைதியா இருந்து கௌதமுக்கு இருப்பு கொள்ளவில்லை, ப்ரியாவுக்கு என்ன ஆசினே தெரியலையே, என்று எண்ணிய போது, அவன் முகம் வியர்த்து, உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. ஒருவேள வரவழிலா, ஏதாவது... சீ ...  என்னடா புத்தி என்னென்னமோ நினைக்குதே, 

பைக்கை எடுத்துக்கொண்டு, அவளின் ஹாஸ்டலுக்கு சென்றான், விடுதி வாசலின் நின்று, போலாமா, வேண்டாமா என  சில நிமிடம் யோசித்துவிட்டு உள்ளே சென்றான்... 
மேடம்.... எஸ் ...   நீங்க யாரு, என்ன வேணும், 
மேடம், என் பேரு கெளதம் ... ப்ரியாவ பாக்கணும்... 
ப்ரியா? வெக்கேட் பண்ணிட்டாங்களே...
என்னா, வெக்கேட் பண்ணிடாலா!
எப்போ...! ரெண்டு நாள் ஆச்சி... என்ன சொல்றீங்க, எங்க போனாங்கன்னு தெரியுமா? 
அவங்க சொந்த ஊருக்கு போறதா, சொன்னாங்க வேற எதுவும் சொல்லல...

கௌதமிற்கு தலையே சுற்றுவது போல் இருந்தது, உடம்பெல்லாம் வியர்த்து, நிலைகொளைந்து
நின்றான்... ஏன் சொல்லாமலே ஊருக்கு போனா, ஒருவேள லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சி இருக்குமோ? மோர்னிங் பேசும்போது கூட வெக்கேட் பண்ணிட்டேனு சொல்லலையே... ஈவ்னிங் மீட் பண்ண வரேன்னு சொன்னாலே... என்ன ப்ரோப்ளேமுனு தெரியலையே.. 

சரி... அவ ஆபிசுக்கு போய் பார்க்கலாம் என்று  பைக்கில் கிளம்பினான்...
அப்போது  சரியாய் பத்து மணி, பிரியா ஐ.டி. இல் பணி புரிவதால் அப்போதுதான் ஒருவர் ஒருவராக வந்து கொண்டு இருந்தனர்.. 

உள்ளே சென்று. ரேசப்சனில் இருப்பவரிடம். பிரியா இருக்காங்களா? 
வீச் பிரியா?... 
சார்,  பிரியதர்ஷினி ... 
ஓ ப்ரியதர்சனி மேடமா,  அவங்க ரிசைன் பண்ணிடங்கலே... 
அவங்களுக்கும், எங்க ஜி.ம்கும்  நெக்ஸ்ட் வீக் மேரேச் அதன் ரிசைன் பண்ணிடாங்க... கௌதமிற்கு இதயத்தில் இடி இறங்குவது போல் இருந்தது... 
சார் நீங்க?
 நா... நா... பிரியா.. பிரான்ட் ...கண்ணில் நீர் கசிய அங்கிருந்து கிளம்பினான்... அவர்கள் இருவரும் சந்திக்கும் இடத்திற்கு சென்று, கண்களை இறுக மூடி,சத்தமில்லாமல் கதறி அழுதான்...

கெளதம், உன்ன ஒருநாள் கூட பாக்காம என்னால  இருக்க முடியல டா, நீ இல்லாம என்னால இருக்க முடியாது செல்லம் ஐ லவ் யூ டா! ப்ரியா பேசியதை நினைத்து எப்படி பிரியா, என்ன உன்னால மறக்க முடிஞ்சது...  ஐயோ கடவுளே... என்ன ஏன் இன்னும் உயிரோட வெச்சி இருக்க... 
அனு அனுவாக சாக நினைதால் காதல் சரியானதுதான்! எமாதவ என்ன காதலிச்ச... என் காதல் உண்மை டி, உன் நினைவே போதும் டி ... ஐ லவ் யூ ப்ரியா...