Saturday, 8 September 2012
Monday, 20 August 2012
நிலா ...
இரவு மொட்டை மாடியில் அமர்ந்து நிலாவை உற்று பார்த்தேன்... நிலா... எந்தனை அழகு... எவ்வளவு குளுமை ...என்ன இனிமை... என் தினேஷை போலா... சில நொடி என் நிலாவோடு ஒன்றிபோனேன்.
அன்று முதல், என் செல் போனில் உன் பெயரை நிலா என மாற்றி பதிவு செய்து கொண்டேன்...
நிலா... வானம், காற்று.. மழை...
நிலாவே வா... என நிலா பாடல்களோடு ஒன்றிவிட்டு கனவோடு லாபித்திருந்தேன்...
செல் போன் சிளிங்கி, என் கனவை கலைத்தது... செல்லம் நூறாயிசு டா உன்ன பத்திதான் நெனசிடு இருந்தேன் நீயே கால் பண்ணிட டா ...
அப்டியா செல்லம்... என்ன நெனச்சா?
ஏதோ நெனச்சேன்... அதெல்லாம் சொல்ல முடியாது...
சரி... சாப்டியா... டி
இல்ல டா... உன்கிட்ட பேசிடு சாப்டலாம்னு வெயிட் பண்ணேன்...
அப்புறம் வேற என்ன டி... நம் உரையாடல் நீண்டு கொண்டே போனது... பிடித்த நடிகர், படம், பாடல், நகைசுவை என் பலவற்றை பேசியும் முடிவில்லாமல் பேசிய வற்றையே பல முறை பேசினோம்...
டேய் போதும் டா... எவ்ள நேரம் பேசுவ, பசிகிது டா ...
செல்லம் கொஞ்ச நேரம் பேசு டி...
டேய் போடா மார்னிங் பேசு... ஓகே...
போடி... போடி... நல்ல சாப்டு என்று செல்லமாய் கோபித்து கொண்டு போனை துண்டித்தாய்...
படுக்கையில் விழுந்து, வராத உறக்கத்தை வரவைக்க புரண்டு புரண்டு படுத்தேன்... உறக்கத்திலும் தட்டி எழுப்பியது உன் நினைவு... எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் உன்னை வட்டமிடுகிறதே என் மனம் இதற்கு பெயர்தான் காதலா? என்னை போலவே நீயும் காதல் வயப்பட்டு இருக்கிறாய், ஆனால் மறைக்கிறாய்... எப்போது சொல்வாய் என் மீதான காதலை...
மாதங்கள் பல கடந்தன... இன்னும் உன் மனதை திறக்க மனம் வரவில்லையா?
ப்ளீஸ், சொல்லுடா ஐ லவ் யூ- னு.
ஒரு நாள் உனக்கும் எனக்கும் சிறிய சண்டை, அன்று வழக்கத்தைவிட அதிகமாகவே திட்டி தீர்த்து விட்டாய்...
ஏன் டா இப்டி திட்றா?
எது கேட்டாலும் கோவமவே பேசுற என்ன ஆச்சிட உனக்கு?
ஆமாம்... நீ சொல்றதுக்கெல்லாம் தலையட்டிடு கூஜா தூக்கிடு உன் பின்னாடியே திரியனுமா வேற வேல இல்ல எனக்கு...
ஏன், டா இப்டி பேசுறா...
நா இபோ என்ன சொல்லிட்டேன், வர வர உனக்கு என்ன பாத்தாலே பிடிக்கிறது இல்ல... என்று கேட்டபோதே என் கண்களில் கண்ணீர் பீரிட்டு கொட்டியது... போதும், நீலிக்கண்ணீர் வடிக்காதே என்றாய்...
என் மனதின் பதைபதைப்பு, என்னை விட்டு சென்று விடுவாயோ என்ற பதற்றத்தில்ஆற்பரித்து கொட்டும் அழுகை உனக்கு எப்படி நீலிக்கண்ணீராக தெரிகிறது...
அன்று முதல் நீ என்னிடம் சரியாக பேசுவதில்லை, ஏனோ ஒப்புக்கு பேசுவது போல பேசுகிறாய்...
என்ன ஆச்சி இவனுக்கு, ஏன் இப்டி மாறிடன்...
உன்னிடம் கேட்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல்
எத்தனையோ இரவுகளில் உறக்கத்தை தொலைத்து இருக்கிறேன்.
திடீரென ஒரு நாள் அப்பா ஒரு பொண்ணு பாத்து இருக்காரு கட்டுன அந்த பொண்ணதான் கட்டணுமாம்... பொண்ணு சுமாராதான் இருக்கு ...
என்ன இருந்தாலும் உன் அளவுக்கு வருமா செல்லம் என்றாய்...
அப்போதுதான் புரிந்தது i am just time pass என்று.
ஒரு பிணத்தைய காதலித்து ஏன் தவறு...
அழுவேன் என்று நினைக்காதே...
பாறையில் நீர் கசியாது?
Friday, 17 August 2012
ஓர் வார்த்தை சொல்லடி
நீ பலமுறை கிழித்தெறிந்த காகித கிறுக்களை
தலையணையாக்கி உறங்கினேன் . . .
கனவிலும் கிழித்து வீசுகிறாய்...
பின்னிமுடித்து பூ சூடும் உன் கூந்தலும்
சொல்லுதடி
என் மீதான காதலை ...
என்னை ஆயிரம் வசை பாடினாலும்...
இறுதியாய் பார்க்கும் ஒற்றை பார்வை சொல்லுதடி
உன் காதலை
நீ மறைத்து ஒளித்து ஓடினாலும்...
உன் வெட்கம் வெளிபடுத்துகிறது
என் மீதான காதல் ...
கொல்லாமல் கொல்லும் பார்வையால்
நித்தமும் சாகிறேன்!
ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போ
நான் உன்னவள் என்று
சில நொடி உயிர் வாழ்கிறேன்
Sunday, 29 July 2012
அனு அனுவாக சாக நினைதால் காதல் செய்
அனு அனுவாக சாக நினைதால் காதல் சரியானதுதான்! என ஆட்டோவில் எழுதியதை பார்த்து, காதல் என்ன ஆட்கொல்லி நோயா? அனு அனுவாக வாழ நினைதால் காதல் சரியானதுதான் என மாற்றி எழுதவேண்டும்.
ஈருடலின் ஒற்றை சுவசம்தானே காதல், ஊடலும், கூடலும்தானே, காதலை ஆழப்படுத்தும் என்று எனக்குள் நானே பேசிக்கொண்டேன்....
நானும், ப்ரியாவும் பழக ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகிறது, ஆனால், இதுநாள் வரை அவள் ஒருமுறை கூட என்னிடம் முகம் சுளித்ததில்லை கோபம் வந்தால் கூட, மவுனமான புன்னகை ஒன்றுதான் அவளின் வெளிப்பாடாக இருக்கும், உண்மையில் ப்ரியா, எனக்கு கிடைத்த வரம்.
முந்தய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு, என்னவளின் நினைவோடு, கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து, அவளுக்காக காத்திருந்தேன்...
ப்ரியாவை என்ன இன்னும் காணோமே, சீக்ராம வந்துடுவளையே, ட்ராபிக்ல மாடிகிட்டலா,போனை எடுத்து டயல் செய்தான். போன ஆப் பண்ணி இருக்கா என்ன ஆச்சி... மாலை மங்கி இரவை தொட்டு விடலாமா? என எண்ணிக்கொண்டு இருந்தது.
அதுவரை அமைதியா இருந்து கௌதமுக்கு இருப்பு கொள்ளவில்லை, ப்ரியாவுக்கு என்ன ஆசினே தெரியலையே, என்று எண்ணிய போது, அவன் முகம் வியர்த்து, உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. ஒருவேள வரவழிலா, ஏதாவது... சீ ... என்னடா புத்தி என்னென்னமோ நினைக்குதே,
பைக்கை எடுத்துக்கொண்டு, அவளின் ஹாஸ்டலுக்கு சென்றான், விடுதி வாசலின் நின்று, போலாமா, வேண்டாமா என சில நிமிடம் யோசித்துவிட்டு உள்ளே சென்றான்...
மேடம்.... எஸ் ... நீங்க யாரு, என்ன வேணும்,
மேடம், என் பேரு கெளதம் ... ப்ரியாவ பாக்கணும்...
ப்ரியா? வெக்கேட் பண்ணிட்டாங்களே...
என்னா, வெக்கேட் பண்ணிடாலா!
எப்போ...! ரெண்டு நாள் ஆச்சி... என்ன சொல்றீங்க, எங்க போனாங்கன்னு தெரியுமா?
அவங்க சொந்த ஊருக்கு போறதா, சொன்னாங்க வேற எதுவும் சொல்லல...
கௌதமிற்கு தலையே சுற்றுவது போல் இருந்தது, உடம்பெல்லாம் வியர்த்து, நிலைகொளைந்து
நின்றான்... ஏன் சொல்லாமலே ஊருக்கு போனா, ஒருவேள லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சி இருக்குமோ? மோர்னிங் பேசும்போது கூட வெக்கேட் பண்ணிட்டேனு சொல்லலையே... ஈவ்னிங் மீட் பண்ண வரேன்னு சொன்னாலே... என்ன ப்ரோப்ளேமுனு தெரியலையே..
சரி... அவ ஆபிசுக்கு போய் பார்க்கலாம் என்று பைக்கில் கிளம்பினான்...
அப்போது சரியாய் பத்து மணி, பிரியா ஐ.டி. இல் பணி புரிவதால் அப்போதுதான் ஒருவர் ஒருவராக வந்து கொண்டு இருந்தனர்..
உள்ளே சென்று. ரேசப்சனில் இருப்பவரிடம். பிரியா இருக்காங்களா?
வீச் பிரியா?...
சார், பிரியதர்ஷினி ...
ஓ ப்ரியதர்சனி மேடமா, அவங்க ரிசைன் பண்ணிடங்கலே...
அவங்களுக்கும், எங்க ஜி.ம்கும் நெக்ஸ்ட் வீக் மேரேச் அதன் ரிசைன் பண்ணிடாங்க... கௌதமிற்கு இதயத்தில் இடி இறங்குவது போல் இருந்தது...
சார் நீங்க?
நா... நா... பிரியா.. பிரான்ட் ...கண்ணில் நீர் கசிய அங்கிருந்து கிளம்பினான்... அவர்கள் இருவரும் சந்திக்கும் இடத்திற்கு சென்று, கண்களை இறுக மூடி,சத்தமில்லாமல் கதறி அழுதான்...
கெளதம், உன்ன ஒருநாள் கூட பாக்காம என்னால இருக்க முடியல டா, நீ இல்லாம என்னால இருக்க முடியாது செல்லம் ஐ லவ் யூ டா! ப்ரியா பேசியதை நினைத்து எப்படி பிரியா, என்ன உன்னால மறக்க முடிஞ்சது... ஐயோ கடவுளே... என்ன ஏன் இன்னும் உயிரோட வெச்சி இருக்க...
அனு அனுவாக சாக நினைதால் காதல் சரியானதுதான்! எமாதவ என்ன காதலிச்ச... என் காதல் உண்மை டி, உன் நினைவே போதும் டி ... ஐ லவ் யூ ப்ரியா...
Sunday, 8 April 2012
சிரிப்பழகி
அவளை முதலில் பார்த்தது
அலுவலகத்தில்தான்,
மவுனமாய் புன்னகைத்து
மின்னல் கீற்றாய் மறைந்தாய்...
அந்த இதழ்விரியா சிரிப்பை காண
தினமும் வந்தேன் அதிகாலையில் ...
அன்று முதல் காகிதத்தில்
கிறுக்கினேன் ... உன்
புன்னகையை வரிகளாக்கா...
எத்தனை முறை முயன்றும்
தோற்றுப்போனது என் பேனா...
ஆண்டுகள் பல ஓடியும் இன்னும்
நெஞ்சை வருடுகிறது அந்த சிரிப்பு . . .
என் சிரிப்பழகியே !
இன்றாவது எழுதுவேனா கவிதை...
அலுவலகத்தில்தான்,
மவுனமாய் புன்னகைத்து
மின்னல் கீற்றாய் மறைந்தாய்...
அந்த இதழ்விரியா சிரிப்பை காண
தினமும் வந்தேன் அதிகாலையில் ...
அன்று முதல் காகிதத்தில்
கிறுக்கினேன் ... உன்
புன்னகையை வரிகளாக்கா...
எத்தனை முறை முயன்றும்
தோற்றுப்போனது என் பேனா...
ஆண்டுகள் பல ஓடியும் இன்னும்
நெஞ்சை வருடுகிறது அந்த சிரிப்பு . . .
என் சிரிப்பழகியே !
இன்றாவது எழுதுவேனா கவிதை...
Friday, 2 March 2012
கூடங்குளம்
கூடங்குளம் அணுஉலை வேண்டுமா... வேண்டாமா... என்பது நம்மில் பலரின் கேள்வி? ஒரு தரப்பினர் வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் வேண்டாம் என்றும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
1988 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் கையெழுத்திட்டனர். அன்றைய நாள் முதலே அதற்கு எதிராக போராட்டங்கள் நடக்க தொடங்கின.
2008 ஆம் ஆண்டில் கூடுதலாக மேலும் ஆறு அணுமின் உலைகளை இங்கு உருவாக்க இந்திய அணுமின் கழகத்துடன் ரஷ்யா உடன்பாட்டை செய்து கொண்டது. இதன் மூலம் 1170 மெகா வாட் அணுமின் திறன் கொண்ட நான்காம் தலைமுறை WER1200 வகை அணுமின் உலைகளை வழங்கும்.
ஆரம்பத்தில் இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றபோதும், ஒருவேளை அணுஉலை வெடித்தால் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நிகழ்த்திய பாதுகாப்பு ஒத்திகை அப்பகுதி மக்களிடையே பீதி எழ ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
மக்களின் அச்சத்தை போக்க அமைக்கப்பட்ட மத்திய, மாநிலக்குழுக்கள் கூடங்குளத்தை மாறிமாறிவட்டமிட்டு சென்றாலும், போரட்டக்குழுக்களின் கேள்விகளுக்கு அவர்கள் செவிமடுக்கவில்லை என்பது சற்று வேதனைதான்!
கூடங்குளத்தை ஆய்வுசெய்த அப்துல்கலமும் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான், சுனாமி ஏற்பட்டாலும் எந்தவித பதிப்பும் இல்லை என்றார். இருப்பினும்அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு, கடலில் போடலாம் அல்லது நிலத்தில் புதைக்கலாம் என்கிறார்.
இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமில்லை, நம் வருங்கால சன்னதிகளும் வாழவேண்டிய பூமி, அணுக்கழிவுகள் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், மேலும் அக்கழிவுகளை இருபத்துநான்கு ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட வேண்டும் இவை சாத்தியமா? கடலில் போடலாம் என்று மற்றுமொரு வழியை கூறுகிறார்கள். கதிரியக்கம் கடலில் கலப்பதால் கடலின் வாழ்வாதாரம் பதிக்கப்படும் அல்லவா?
மின்சாரபற்றக்குறையால் தமிழகம் தவிக்கும் வேளையில் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கினால் ஐம்பது சதவீதம் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என பிரதமர் கூறியிருப்பது யாரை திருப்திபடுத்த...?
ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வெப்பம் நிலவும் அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளே சூரிய மின்சாரம் தயாரிக்கும் போது, ஆண்டு முழுவதும்,வெப்பம் நிலவும் நம் நாட்டில் சூரிய மின்சாரம் தயாரிப்பது சாத்தியம் தானே? குறைந்த செலவில் அதிக மின்னுற்பத்தி செய்ய வழிகள் இருந்தும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவான் ஏன்?
அணுஉலை பாதுகாப்பானது, நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை, கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் தொலைவில் உள்ளது, எந்த விதமான கதிர்வீச்சு ஆபத்தில்லை என் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை விடுகின்றனர்.
விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டத்தை ஏற்படுத்தியது ஏன்? அணு பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது ஏன்? அணுஉலையை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிப்பது ஏன்?
ஜேர்மன், ஜப்பான் போன்ற உலக நாடுகளே அணு உலைகளை மூடிவரும்
திறந்தேயாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பது முறையா?
பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கைக்காக ஓடியோடி பொருள் ஈட்டும் நாம், நாளை அவர்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுக்க வேண்டாமா?
நாளைய தலைமுறை கவலையின்றி வாழ கூடங்குளம் அணுஉலை திட்டத்தை இன்றே போராடி எதிர்ப்போம் ........ ஒற்றுமைவோடு போராடுவோம்.....

Monday, 13 February 2012
சோமாலியா
சோமாலியா . . . சோக பூமியா. . .
மழலையின் பசி அறிந்தும் பாலூட்ட முடியா நிலை, மார்பிறிந்தும், கை பிசைந்து கண்ணில் நீர் கசிந்து வாடுவது சோமாலிய பெண்களின் இன்றைய நிலை..
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 29 ஆயிரம் பிஞ்சுகளை எமனுக்கு வாரி கொடுத்துள்ளனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, ஒட்டிய வயிறுக்கு ஒருபிடி சோறு இல்லாமல் மடிந்துள்ளனர்.
சோமாலியாவில் 20 வருடங்களாக கலவரங்கள் நடைபெறுவதும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் சர்வசாதரணமாக மாறிவிட்டாலும், குழந்தைகளின் இறப்பு நெஞ்சை பதைப்பதைக்க செய்கிறது..
வறட்சியால் வாழ்வை தொலைத்து வாழ வழியின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவை கொண்டு சேர்ப்பது ஐநாவின் கடமை தானே. இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல கை கட்டி, வாய் பொத்தி எட்டிநின்று வேடிக்கை பார்க்கின்றன சில வளர்ந்த நாடுகள்.
பட்டினிச்சாவு, உள்நாட்டு போர் என இந்த ஈவு இறக்கமற்ற நிலை என்று மாறும் . . . மரணத்தைக்கூட இயல்பாக பார்க்கும் அளவுக்கு நம் மனநிலை மாறிவிட்டதா என்ன?
பேருந்தில்...
அடித்துபிடித்து பேருந்தில் ஏறி
நீ பார்ப்பது போல் அமர்ந்தேன்...
ஒரு முனையில் நீ...
மறுமுனையில் நான் ....
இடைவெளி அதிகம் என்றாலும்
இணைந்து இருந்தது நம் கண்கள்...!
தீமுட்டும் உன் விழியின்
சீண்டல்களும்....
உன்னை கடக்கும் போது
உரசி செல்லும் வெப்ப காற்றாலும்
சீலிர்க்கிறேன்...
ஒரு முறை பேசுவாய் என தினமும்
வருகிறேன் அப்பேருந்தில் ...
Tuesday, 3 January 2012
ரகசியமாய்...
ரகசியமாக கனவு காண,
ரகசியமாக பேச
மெல்ல சிரித்து, அழகாக வெட்கப்பட,
கற்றுக்கொண்டது என்னுள் உள்ள ஒருவனாள் !
கண் ஓளியில் உயிர்த்தெழுவதும்
பரீசியமானதும் உன்னால்......
உன்னுள் என்னை தொலைத்து,
என்னுள் உன்னை பதியவைத்துள்ளேன்
வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்!என்னுள் ரீங்காரமிடும்,
உன் முனுங்களும், சினுங்களும்
என் காதுகளுக்கு மட்டும் கேட்கும் ரகசியமாய் !
உனக்கேன நான், என்னக்கேன நீ - என
என்றும் இருப்பாயா என்னுள் ரகசியமாய் .....
Subscribe to:
Posts (Atom)