Sunday, 8 April 2012

சிரிப்பழகி

அவளை முதலில் பார்த்தது
அலுவலகத்தில்தான்,
மவுனமாய் புன்னகைத்து
மின்னல் கீற்றாய் மறைந்தாய்...
அந்த இதழ்விரியா சிரிப்பை காண
தினமும் வந்தேன் அதிகாலையில் ...

அன்று முதல் காகிதத்தில் 
கிறுக்கினேன் ... உன் 
புன்னகையை வரிகளாக்கா...
எத்தனை முறை முயன்றும் 
தோற்றுப்போனது என் பேனா...

ஆண்டுகள் பல ஓடியும் இன்னும் 
நெஞ்சை வருடுகிறது அந்த சிரிப்பு . . . 
என் சிரிப்பழகியே !  
இன்றாவது எழுதுவேனா கவிதை...