Monday, 3 October 2011

முதல் பார்வை. . .


உன் முதல் பார்வையிலேயே வீழ்ந்தேன் 
என்று சொல்லலாம் . . .
யாரிடமும் இல்லாத ஓர் வசீகரம் . . . 
முன் எப்போதுமில்லாத உணர்வு. . . 
இத்தனை மாற்றங்களும். . . 
நொடிப்பொழுதில் நீ வீசிச் சென்ற பார்வையால் . .. 
பார்த்தவுடன் பற்றிக்கொண்ட 
விழிகளைவும் . . . 
மின்னலென வெட்டிச் சென்ற - உன் 
கண்களின் அசைவைவும் 
தேடி அலைகிறேன். . . 
என்றோ ஒருநாள் என்னை 

கிரங்கவைத்த விழிகளை காண்பேன். .. 
அதுநாள் வரை -
 உன் நினைவுடன் . . . 



Sunday, 2 October 2011

ஞாபகம் இல்லையோ!

இதயக்கூட்டில்  சிறகுகளை 
விரித்துப் பறந்த நம் காதலை . . . 

கொஞ்சிப்பேசி மகிழ்ந்து 
களித்த நாட்களை . . . 

எனக்கு நீ, உனக்கு நான் ! 
என பேசியவற்றை . . . 

நீ மறந்துவிட்டதால் யாரோ என்பது போல. . . 
பார்த்தும் பார்க்காமல் செல்கிறாய் . . . 

உன் நினைவுகளை சுமந்து வாழ்வதால் 
சிலையாய் நின்று . . .  
நீ சென்ற வழியை விரைத்து
பார்க்கிறேன் . . . 
நீ கல் என்பது தெரியாமல் . . .