Sunday, 2 October 2011

ஞாபகம் இல்லையோ!

இதயக்கூட்டில்  சிறகுகளை 
விரித்துப் பறந்த நம் காதலை . . . 

கொஞ்சிப்பேசி மகிழ்ந்து 
களித்த நாட்களை . . . 

எனக்கு நீ, உனக்கு நான் ! 
என பேசியவற்றை . . . 

நீ மறந்துவிட்டதால் யாரோ என்பது போல. . . 
பார்த்தும் பார்க்காமல் செல்கிறாய் . . . 

உன் நினைவுகளை சுமந்து வாழ்வதால் 
சிலையாய் நின்று . . .  
நீ சென்ற வழியை விரைத்து
பார்க்கிறேன் . . . 
நீ கல் என்பது தெரியாமல் . . . 


 

No comments:

Post a Comment